search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை புத்தகம்"

    • தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.
    • நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

    இதனையொட்டி தனது சாதனை புத்தகத்தை கவர்னர் தமிழிசை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல்வாதியாக இருந்து கவர்னராக வந்ததால், எதிர்கருத்துக்கும் பதில் தருவது வழக்கம். என்னுடையது சுமூகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே என்னை உயர்த்திக் கொண்டேன்.

    தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.

    நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    சமீபத்தில் சட்டப்பேரவை கோப்பு தொடர்பாக சபா நாயகர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அரசியலில் 25 ஆண்டுகளை செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்து தான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை.

    எந்த கோப்பிலும் சுய லாபத்தை பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கவர்னர் அலுவலகம் இயங்குகிறது.

    மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப் பேரவை கட்டுமான கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம். செலவினம் அதிகளவில் உள்ளது.

    நாடாளுமன்றக்கட்டிடம், தெலுங்கானா சட்டசபை கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும் போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும், ஆடம்பரமாக செலவிடப்பட்டு விட கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

    இது நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளிடம் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணி யாற்றி கொண்டிருக்கிறேன்.

    என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம்தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தா நான். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுவையில் போட்டியிடுவது பற்றி நான் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள்.

    இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண்.அதனால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுவையை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையா ளத்தை தரவேண்டாம். அது மனவலியை தருகிறது. வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.

    அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை. ஆனால் ஒத்துழைப்பு போதிய அளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன். நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
    • உலக சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்கள்.

    விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்றைய குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு வயதிலேயே எண்ணி பார்க்க முடியாத சாதனைகளை அசாத்தியமாக படைக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உலக சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்கள்.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை உலக சாதனை படைத்து 'கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு', 'இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு' ஆகிய சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது.

    அந்த குழந்தையின் பெயர் சாய் ஈஷா. தந்தை சக்தீந்திரன், தாய் முத்தம்மாள். புலியூர்குறிச்சி கிராமத்தில் வசிக்கிறார்கள். சக்தீந்திரன் டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இல்லத்தரசியான முத்தம்மாள் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே பி.ஏ. படித்து வருகிறார்.

    120 பொருட்கள் மற்றும் காட்சிகளை சரியாக அடையாளம் காட்டும் புத்திக் கூர்மை தான் இவர்களின் மகளான சாய் ஈஷாவை சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வைத்துள்ளது. குழந்தையின் திறமை பற்றி தாயார் முத்தம்மாள் பகிர்ந்து கொண்டவை...

    ''சாய் ஈஷா 9 மாத குழந்தையாக இருந்தபோது, மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பார்க்கும் பொருட்களை சரியாக அடையாளம் காட்டத் தொடங்கினாள். அதை நான் கவனித்தேன். நான் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்தால் அதை அவள் அப்படியே திருப்பி செய்து காட்டுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கும் சரி, விருந்தினர்கள் வீட்டுக்கு வரும் போதும் சரி வணக்கம் சொல்வாள். இதையெல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுக்காமலேயே செய்தாள்.

    இதை வைத்து நாம் செய்வதை எல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு செயல்படுகிறாள், அதனால் அவளிடம் எளிதாக புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம்.

    எந்த வகையில் பயிற்சி அளித்தீர்கள்?

    ஒவ்வொரு பொருளாக கொடுத்து பயிற்சி அளித்தோம். எந்த பொருளையும் மறக்காமல் நினைவில் வைத்து சொல்ல தொடங்கினாள். இப்படி 120 பொருட்களை 10-வது மாதத்தில் சரியாக அடையாளம் காட்டினாள். ஆரம்பத்தில் காலையில் எழுந்ததும் அவள் பார்க்கும் சூரியன், இரவில் பார்க்கும் நிலவு ஆகியவற்றை காட்டிக்கொடுத்து பயிற்சி அளித்தோம். இதை பிளாஷ் கார்டில் காண்பித்து கேட்கும்போதும் அதை அவள் சரியாக அடையாளம் காட்டினாள்.

    அதேபோல் வீட்டில் உள்ள பொருட்களை காட்டி பயிற்சி அளித்து விட்டு, மறுநாள் கேட்கும் போது சரியாக அடையாளம் காட்டினாள். இவ்வாறு அவளுக்கு தினமும் பயிற்சி அளித்தோம். மேலும் உடலின் பாகங்களை பட அட்டைகள் மூலம் காண்பித்து பயிற்சி அளித்தோம். அதையும் அவள் சரியாக அடையாளம் காட்டினாள். சில படக்காட்சிகளை லேப்டாப் மூலம் காண்பித்து பயிற்சி அளித்தோம். இவ்வாறு 80 படங்களை சரியாக அடையாளம் காட்டினாள்.

    சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது பற்றி?

    கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு, இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய 2 உலக சாதனை புத்தகத்துக்கும் நாங்கள் விண்ணப்பித்தோம். அப்போது உலக சாதனை புத்தக நிர்வாகிகள், 'சாதாரணமாக குழந்தைகள் 50 பொருட்களை அடையாளம் காட்டுவார்கள். அதிக நினைவாற்றல், புத்திக்கூர்மை உள்ள குழந்தையாக சாதனை படைக்க வேண்டும் என்றால் 100-க்கும் மேலான பொருட்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பது எங்கள் இலக்கு' என்றனர்.

    10 மாதத்தில் இதுவரை எந்தக் குழந்தையும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களை அடையாளம் காட்டி சாதனை படைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

    இந்த சாதனையை படைக்க குழந்தைக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தோம். இந்த பயிற்சியின் தாக்கம் 120 பொருட்கள் வரை அடையாளம் காட்டினாள். அதுதொடர்பான வீடியோ காட்சிகளை உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பியிருந்தோம்.

    அதைப்பார்த்துவிட்டு, வீடியோ கால் மூலம் குழந்தையை பரிசோதித்து உலக சாதனை புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். அதற்கான விழா சென்னையில் நடந்தது. அதற்கு எங்களை அழைத்திருந்தார்கள். உடல்நலக்குறைவு காரணமாக எங்களால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் விருதை எங்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

    இந்த ஆண்டு வெளியாகும் அவர்களுடைய சாதனை புத்தகத்தில் 'எக்ஸ்டிராடினரி கிராஸ்பிங் பவர்' பிரிவில் எனது குழந்தையின் பெயரும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்தனர். விருது கிடைத்ததாக எனக்கு தகவல் வந்ததும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

    இந்த சாதனை புத்தகத்துக்கு நானாகத்தான் விண்ணப்பித்தேன். குழந்தை விருது பெற்றது தொடர்பாக எனது கணவரிடம் நான் சொன்னபோது அவர் நம்பவில்லை. விருது வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் அவரும் நம்பியதோடு எங்கள் குடும்பத்தினரும் சந்தோஷம் அடைந்தனர்.

    எதிர்கால லட்சியம்?

    எதிர்காலத்தில் அவள் என்ன ஆக விரும்புகிறாளோ அதற்கு நான் உதவியாக இருப்பேன். அவள் வளரும்போதுதான் லட்சியம், நோக்கம் எல்லாம் தெரியவரும். எதில் ஆர்வம் காட்டுகிறாளோ அது தொடர்பாக படிக்க வைக்க எண்ணியிருக்கிறேன். எனது குழந்தை டாக்டராக வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அதை அவளிடம் திணிக்க விரும்பவில்லை. அவளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பாக படிக்க வைப்பேன்.

    அவளுக்கு இருக்கிற நினைவாற்றல், புத்திக்கூர்மையை பயன்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் அவளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அதிலும் அவள் சாதனை படைப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது என பெருமிதத்துடன் கூறுகிறார், முத்தம்மாள்.

    ×